வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 மே 2022 (11:55 IST)

இலங்கை தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி! – தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு!

இலங்கை மக்களுக்கு பொருளாதார உதவி செய்ய நிதி வழங்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ள நிலையில் தேமுதிக நிதியளிப்பதாக அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் பலர் படகுகள் மூலமாக தமிழகத்தை நோக்கி வருவதும் அதிகரித்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள், மக்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இலங்கை தமிழர்களுக்கு உதவ நிதியளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது தேமுதிக கட்சி சார்பில் இலங்கை தமிழர்களுக்கு உதவ முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் பல அரசியல் கட்சிகளும் நிவாரண நிதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.