1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijayakanth condemn for tn govt

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதியில்லை: விஜயகாந்த்

vijayakanth
அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதி இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார் 
 
அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதியின்மை மருத்துவ பற்றாக்குறை நீடிக்கிறது என்றும் இவற்றை தடுக்க முதலமைச்சரின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் 
 
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீ விபத்து குறித்து அவர் மேலும் கூறியபோது, ‘சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது சற்று நிம்மதி அடைந்தேன்.
 
ஆனாலும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட காரணமாக இருந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு மாறும் அரசுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறி உள்ளார்
 
 
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்