வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (10:07 IST)

இனி நீ கடவுளின் குழந்தை சுஜித்!! விஜயபாஸ்கர் இரங்கல்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்திற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்க 80 மணி நேரத்திற்கு மேல் போராடினர். ஆனால் அவனை உயிருடன் மீட்கமுடியவில்லை. இதனையடுத்து சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து ஃபாத்திமாபுதூர் கல்லறையில் கிருஸ்துவ முறைப்படி அடக்கம் சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து திமுக தலைவர் மிக ஸ்டாலின், விஜயகாந்த், விஜயபாஸ்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுஜித்தின்  மரணம் குறித்து சுகாதாரத்துறை விஜயபாஸ்கர், ”மனதை தேற்றிகொள்கிறேன், ஏன் என்றால் இனிமேல் சுஜித் கடவுளின் குழந்தை” என கூறியுள்ளார். மேலும் கருவறை இருட்டு போல் இருப்பாய் என நினைத்தோம், கல்லறை இருட்டாய் மாறுமென எண்ணவில்லை” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், “85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சு சத்தம் தான் மீட்பு பணியில் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது. இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது, இப்படி எம்மை புழம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை” எனவும் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் சுஜித்தை மீட்கும் பணியில் மிகவும் தீவிரமாக செயல்பட்டர். சுஜித்தை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என களத்திலேயே உறங்காமலும் உண்ணாமலும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.