செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2019 (08:41 IST)

சுஜித்திற்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவிக்கும் இந்தியர்கள்..

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதை தொடர்ந்து டிவிட்டரில் இந்திய அளவில் #RIPSujith #SorrySujith ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்பதற்கு 80 மணி நேரத்திற்கும் மேல் போராட்டம் நடந்தது. ஆனால் சுஜித்தை உயிருடன் மீட்கமுடியவில்லை.

இந்நிலையில் சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்பு சுஜித்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சுஜித்தின்  உடல் ஃபாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் டிவிட்டரில் இந்திய அளவில் #RIPSujith #SorrySujith #SujithWilson ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. மேலும் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சுஜித்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.