செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (08:17 IST)

தம்பியின் சவப்பெட்டியை பார்த்து கதறி அழுத சுஜித் அண்ணன்!

நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவன் சுஜித்தை மீட்க கடந்த 80 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புக்குழுவினர் பலர் போராடி வந்த நிலையில் இன்று அதிகாலை சுஜித்தின் இறந்த உடலை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது 
 
இந்த சோகம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை மட்டுமன்றி தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக சுஜித்தின் பெற்றோர்கள் இன்னும் இந்த சோகத்திலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் உள்ளனர்
 
சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை முதல் முதலில் பார்த்த சுஜித்தின் அண்ணன் அதிர்ச்சியின் உச்சத்தில் இருப்பதாகவும், எப்படியும் தன்னுடைய தம்பியை மீட்புக்குழுவினர் மீட்டு விடுவார்கள், தம்பியை உயிருடன் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்த அந்த சிறுவனுக்கு ஆறுதல் சொல்ல முடியாத அளவில் அவனுடைய உறவினர்கள் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
தந்தையின் மடியில் சோகத்தின் வீரியம் கூட முழுமையாக தெரியாமல் இருக்கும் அந்த சிறுவன் சுஜித்தின் சவப்பெட்டி அருகே வந்து கதறி அழுத காட்சி அனைவரையும் கண்ணீரை வரவழைத்தது. எப்படியாவது எப்படியாவது தம்பி மீண்டு வருவான் என்று நினைத்தேனே என்று அந்த சிறுவன் கதறி அழும் காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இனியொரு உயிர் இனிமேலும் பலியாகாமல் இருக்க அனைவரும் சேர்ந்து எடுக்கக்கூடிய நடவடிக்கையே சுஜித்துக்கு உண்மையாக செய்யும் இரங்கல் ஆகும்