எனக்கு வேற வேலை இருக்கு!. தவெக ஆட்சி பற்றி பேசிய விஜய் சேதுபதி...
நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் நடிப்பது போல் நடிப்பது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் சில கருத்துக்களை தெரிவித்தார். அந்த கருத்துக்களை விஜய் சேதுபதி முதல்வர் விஜயை மனதில் வைத்தே பேசியிருக்கிறார் என தவெக ஆதரவாளர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கோபமடைந்தனர். இதையடுத்து, பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் விஜய் சேதுபதியை அவர்கள் திட்டினார்கள்..
இந்நிலையில் பேட்டி ஒன்றில் தவெக ஆட்சி பற்றி விஜய் சேதுபதியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் விஜய் சாரோடும் நான் நடித்திருக்கிறேன்.. அவரை ஒரு நடிகராக எனக்கு தெரியும்.. ஆனால் அரசியல் என்பது ஆட்சியாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை வைத்துதான் பார்க்க முடியும்.. ஆனால் அதை உட்கார்ந்து பார்ப்பதற்கு எனக்கு நேரம் இல்லை. அது என் வேலையும் இல்லை
.
அரசியல் கருத்தை பேசினால் அதை இங்கே யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதேபோல் ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டுமானால் அதை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.. முழுமையாக தெரியாமல் பொதுவாக கருத்து சொல்ல முடியாது எனவும் அவர் கூறியிருக்கிறார்.