கடலில் இறங்கி போராடிய விஜய் ரசிகர்கள்: ஏன் தெரியுமா?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து பிரிவு மக்களும் போராடி வருகின்றனர்.
மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசை எதிர்த்து போராடி வரும் தமிழக மக்களுக்கு நீதி கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் உள்ளது.
இந்த நிலையில் கோலிவுட் திரையுலகினர்களும் நாளை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை அறப்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் திடீரென கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் போராட்டக்காரர்களை அமைதியாக கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.