திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 7 ஏப்ரல் 2018 (17:30 IST)

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி விரைவில் தெலுங்கு நடிகர்கள் போராட்டம்!

ஆந்திராவுக்கு நிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு நடிகர்கள் விரைவில் டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரை கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற இருக்கிறது.
 
அதே போல் ஆந்திராவிலும் சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது.
 
இது குறித்து திருப்பதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியில் அளித்த நடிகர் சுமன், ஆந்திராவில் சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் நடத்த போவதாகவும், விரைவில் போராட்டம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.