சூடுபிடிக்கும் ஸ்ரீலீக்ஸ்; நடிகை அரைநிர்வாண போராட்டம்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரைப்பட சேம்பர் அலுவலம் முன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகில் பட வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கு பழக்கம் உள்ளது நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். பாலிவுட் தொடங்கி மலையாளம், தமிழ, தெலுங்கு என அனைத்து சினிமா துறைகளிலும் இந்த பிரச்சனை உள்ளது என சில நடிகைகள் தைரியமாக வெளிப்படையாக கூறியது குறிப்பிடத்தக்கது.
தமிழில் சுச்சி லீக்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோன்று தற்போது தெலுங்கில் ஸ்ரீ லீக்ஸ் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீ ரெட்டி சேகர் கம்முலு என்ற இயக்குநரை மறைமுகமாக குற்றம்சாட்டினார். இதற்கு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமா சேம்பர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.