1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (16:01 IST)

காவிரி விவகாரம்: சேப்பாக்கம் மைதானத்துக்கு பலத்த பாதுகாப்பு

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என வேல்முருகன், தமிமுன் அன்சாரி, திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் சில இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 
 
இந்நிலையில், வரும் 10-ம் தேதி  சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது. இதனால் மைதானத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.