விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...
நடிகர் விஜய்க்கு ஏராளமான பெண் ரசிகைகள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் இப்போதுள்ள நடிகர்களில் அதிக பெண் ரசிகைகளை வைத்திருப்பவர் விஜய் மட்டுமே. விஜயை நேரில் பார்க்கவும், அருகில் பார்க்கவும், அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், எல்லோருக்கும் அது நடந்துவிடுவது இல்லை.
புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட போது கூட அவரை பார்க்க முடியாமல் இளம்பெண் ஃபீல் பண்ணி பேசிய வீடியோ வெளியானது. விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க நிறைய பெண்கள் ஆசைப்பட்டார்கள். சிலர் கை குழந்தையோடு வந்தார்கள். அதில் சிலர்தான் கூட்டநெரிசலில் சிக்கி மரணமடைந்தார்கள்.
அதனால்தான் புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் நடந்தபோது பல கட்டுப்பாடுகளை போலீசார் விதித்தார்கள். 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி.. அதுவும் QR Code மூலம் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில்தான், விஜயின் புகைப்படத்தை வைத்திருந்ததால் தனது மகளின் திருமண வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது என ஒரு பெண் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜயின் போடோவை என் மகள் அவளின் செல்போனில் வால்பேப்பராக வைத்திருந்தாள். இதனால் கோபமடைந்த என் மகளின் கணவர் அவளை விட்டு சென்றுவிட்டார். விஜய்க்காக என் மகள் வாழ்க்கையையே விட்டிருக்கிறார் என தவெக கூட்டத்தில் பங்கேற்ற அந்த பெண் பேசியிருக்கிறார்.