வெள்ளி, 13 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 10 டிசம்பர் 2025 (11:40 IST)

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!
குஜராத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர், மனைவி வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் தவிர்த்த காரணத்தால் ஏற்பட்ட நீண்டகால மோதல் காரணமாக, தங்கள் 23 ஆண்டுகால திருமண உறவில் இருந்து விவாகரத்து பெற்றுள்ளனர். அகமதாபாத் குடும்ப நீதிமன்றத்தின் இந்த விவாகரத்துத் தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.
 
சுவாமிநாராயண் பிரிவை சேர்ந்த மனைவி, தனது மத நம்பிக்கையின் காரணமாக வெங்காயம் மற்றும் பூண்டு சேர்ப்பதை தவிர்த்ததே சண்டைக்கு முக்கியக் காரணம் என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது. 2002-இல் திருமணம் நடந்ததில் இருந்து, மற்றவர்களுக்கு சமைக்கும் உணவிலிருந்து இவருக்காக தனியாக சமைக்கப்பட்டு வந்தது.
 
இந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, 2007-இல் மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். 2013-இல் கணவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.
 
விசாரணைக்கு பிறகு, மனைவி விவாகரத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால், நிலுவையில் இருந்த ஜீவனாம்ச தொகை ரூ.13,02,000 குறித்து மட்டுமே கவலை தெரிவித்தார். உயர் நீதிமன்றம் ஜீவனாம்ச தொகையைச் சரிபார்த்து, அதை மனைவிக்கு செலுத்த கணவருக்கு உத்தரவிட்டதுடன், விவாகரத்தையும் உறுதி செய்தது.
 
Edited by Siva