திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (11:22 IST)

‘கொடிக்கான விளக்கத்தை விரைவில் அறிவிக்கிறேன்’… த வெ க தலைவர் விஜய் பேச்சு!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார். இதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நடந்தது.

கட்சிக் கொடியில் மேலும் கீழும் சிவப்பு வண்ணம் இடம்பெற்றிருக்க, நடுவில் மஞ்சள் வண்ணத்தில் நடுவில் வாகைப் பூவும், அதன் இருபுறமும் யானைகள் பிளிருவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்சியில் இடம்பெற்றுள்ள வண்ணம் மற்றும் யானை மற்றும் வாகைப்பூ குறித்த விளக்கத்தை விரைவில் அறிவிக்கிறேன் என்று விஜய் கூறியுள்ளார். மேலும் “இந்த கொடிக்குப் பின்னால் ஒரு வரலாற்று சம்பவம் உள்ளது. அதை உங்களுக்கு விரைவில் அறிவிப்பேன்.” எனக் கூறியுள்ளார். வாகைப் பூ என்பது வெற்றியைக் குறிக்கும், அதே போல யானைகள் பிளிறுவது என்பது போருக்கு முந்தைய அறைகூவல் போல இருப்பதாக இப்போதே கருத்துகள் எழுந்துள்ளன.