ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (07:34 IST)

இந்தியன் 2-வில் செய்த அதே தவறை செய்கின்றதா கோட் படக்குழு… ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

இந்த ஆண்டில் வெளியாகவுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உருவாகி வருகிறது விஜய்யின் GOAT திரைப்படம். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனது. ஆகஷன், செண்ட்டிமெண்ட், நகைச்சுவை என வழக்கமான விஜய்யின் மாஸ் மசாலா படமாக கோட் இருக்கும் என்பதை டிரைலர் கோடிட்டு காட்டுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் டி ஏஜிங் லுக் சில வினாடிகளே வந்து சென்றது. இந்த டிரைலர் ரசிகர்களுக்கு படத்தின் உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரன்னிங் டைம் 3 மணிநேரம் அளவுக்கு இருக்குமென்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் அதன் நீளத்தால் ரசிகர்களை அயர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால் ரிலீஸான பின்னர் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இப்போது கோட் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.