செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:31 IST)

கட்சிக் கொடி அறிமுக விழாவுக்கு வருகை தந்த எஸ் ஏ சந்திரசேகர் & ஷோபா!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய இருக்கிறார். இதற்கானக் கூட்டம் சென்னை பனையூரில் தற்போது நடந்து வருகிறது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள விஜய்யின் தந்தையும் தாயுமானான எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது கூட்டத்துக்கு வந்து ரசிகர்களை வரவேற்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கும் அவர் தந்தைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்வில் எஸ் ஏ சி கலந்துகொண்டு இருப்பது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அறிமுகப்படுத்தவுள்ள த வெ க –வின் கொடி இரு வண்ணங்கள் கொண்ட கொடியாக இருக்கும் என்றும் இந்த கொடியின் நடுவில் இரண்டு போர் யானைகள் இருக்கும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.