வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (10:47 IST)

வெற்றி நிச்சயம்.. நல்லதே நடக்கும்.. தவெக கொடியை அறிமுகம் செய்து விஜய் பேச்சு..!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து நடிகர் விஜய் வெற்றி நிச்சயம், நல்லதே நடக்கும் என்று பேசியுள்ளார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடி இன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த கொடி இரண்டு வண்ணங்களில், இரண்டு போர் யானைகள் மற்றும் வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த விஜய் அதன் பின் பேசியதாவது:

கொடியின் இடம் பெற்றுள்ள படங்களின் விளக்கத்தை முதல் மாநில மாநாட்டில் தெரிவிக்கிறேன். முதல் மாநில மாநாடு எப்போது நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். இவ்வளவு நாள் நமக்காக உழைத்தோம். இனி தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்போம். தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாடு வளர்ச்சிக்காகவும் உழைப்போம். சந்தோஷமா, கெத்தா நம் கட்சி கொடியை ஏற்றி கொண்டாடுவோம்.

இது கட்சிக்கொடி அல்ல. வருங்கால தலைமுறையினருக்கான வெற்றிக்கொடி. முறையாக அனுமதி பெற்று, தொண்டர்கள் அவரவர் இல்லத்தில் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும். அனைவரிடமும் தோழமை பாராட்டி உரிய அனுமதி பெற்று கொடியை ஏற்றி
கொண்டாடுங்கள். எல்லோரும் நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

Edited by Mahendran