வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2024 (13:09 IST)

அதிமுகவிடம் 80 தொகுதிகள் கேட்டாரா விஜய்? அரசியல் விமர்சகர்களின் கருத்துக்கள்..!

Vijay EPS
அதிமுகவிடம் விஜய் 80 தொகுதிகள் கேட்டதாகவும், அதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்ததால் தான் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தற்போது செய்தி பரப்பப்பட்டு வருவதாகவும், அரசியல் விமர்சகர்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த்  முதல் கமல்ஹாசன் வரை நடிகர்கள் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் ள் செய்த ஒரே தவறு, கூட்டணி இல்லாமல் முதல் தேர்தலிலே தனித்து போட்டியிட்டது தான். அந்த தவறை விஜய் செய்ய மாட்டார் என்றும், முதல் தேர்தலிலே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற எதார்த்தத்தை உணர்ந்த விஜய், கூட்டணி வைத்து போட்டியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்த விஜய், அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை என்பதை எடுத்து, அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை மறைமுகமாக நடத்தி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுகவிடம் 80 தொகுதிகளை கேட்டதாகவும், அதற்கு அதிமுக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என புஸ்ஸி ஆனந்த் மூலம் விஜய் செய்தியை பரப்பி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Edited by Mahendran