செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 டிசம்பர் 2025 (18:17 IST)

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி, தி.மு.க. அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் இன்று மக்களவை சபாநாயகரிடம் தீர்மான நோட்டீஸ் வழங்கினர். 
 
நீதிபதி சுவாமிநாதன் அளித்த திருப்பரங்குன்றம் மலை தீபம் குறித்த தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தாத நிலையில், அவருக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
தி.மு.க.வின் கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்ட 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர். ஒரு நீதிபதியைப் பதவி நீக்க, இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. 
 
ஆனால், 'இந்தியா' கூட்டணிக்கு அந்த பலம் இல்லை என்பதால், மனு தள்ளுபடி செய்யப்படவே வாய்ப்புள்ளது. பலம் இல்லை என்று தெரிந்தும் தீர்மானம் இயற்றி இருப்பது  வெறும் அரசியல் நாடகமே என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
Edited by Siva