செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 நவம்பர் 2024 (15:46 IST)

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் போட்டியிடும் தொகுதி குறித்து தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஒரு பக்கம் வலுவாக இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமான் கட்சி போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் பங்கு இந்த தேர்தலில் எப்படி இருக்கும் என்பதை இதுவரை கணிக்க முடியவில்லை. அந்த கட்சியை எந்த கூட்டணியில் இணையும், அல்லது தனது தலைமையில் ஒரு கூட்டணி அமைக்குமா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தர்மபுரி மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என்று ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Edited by Siva