செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: செவ்வாய், 9 டிசம்பர் 2025 (16:53 IST)

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

tamizhisai soundararajan
இன்று புதுச்சேரியில் தனது தேர்தல் பரப்புரையை முடித்து சென்னை திரும்பியிருக்கிறார் விஜய். அங்கு என்ன பேசப் போகிறார்? எப்படி பேசப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அங்கும் தமிழக அரசையும் மத்திய அரசையும் விமர்சித்துதான் பேசினார். அதோடு ஒன்றிய அரசின் கவனிப்பு இல்லாமல் புதுச்சேரி வாடி போயிருப்பதாகவும் கூறினார். இதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தக்க விளக்கத்தை கொடுத்திருக்கிறார். 
 
விஜய் புதுச்சேரி சென்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் புதுச்சேரி மக்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள். அதனால் அவர்களை போய் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. புதுச்சேரி போலீஸ் காவலர்களை பாராட்டியதும் மகிழ்ச்சி. அவர்கள் திறம்பட செயலாற்றக் கூடியவர்கள். அதை போல புதுச்சேரி முதல்வரை பாராட்டியதும் மகிழ்ச்சி. ஆனால் புதுச்சேரி அரசும் மத்திய அரசும் வேறு வேறு என்பதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்.
 
இந்த வேறுபாட்டை அவர் தவிர்த்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து. முதலமைச்சரை பாராட்டியதற்கு நன்றி. ஆனால் அதே முதலமைச்சர் தேசிய ஜனநாயகக் கட்சியின் முதலமைச்சர்தான். பாரதிய ஜனநாயக கட்சியும் முதலமைச்சரும் வேறுபாடு கிடையாது என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன். அதுமட்டுமில்லாமல் மரியாதைக்குரிய பாரத பிரதமர் முதன்முதலில் புதுச்சேரிக்கு வரும் போது புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற வேண்டும் என விரும்பினார்.
 
பெஸ்ட் என்றால் வியாபாரத்தில் கல்வியில் ஆன்மீகத்தில் சுற்றுலாவில் என அனைத்து துறைகளிலும் மிகப்பிரம்மாண்டமான மாநிலமாக மாற்ற வேண்டும் என விரும்பி அதற்கான முயற்சிகளை செய்ய ஆரம்பித்தார். ஏனெனில் 12 ஆண்டுகளாக புதுச்சேரியில் முழு நேர பட்ஜெட்டே கிடையாது. இடை நிலை பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. 
 
ஆனால் முதன் முதலில் நான் அங்கு போனதும் என்.டி.ஏ அரசு வந்ததும் முழு நேர பட்ஜெட்  ,2000 கோடி உதவி செய்து சமர்ப்பிக்கப்பட்டது. அதே மாதிரி எல்லா அரசாங்க பள்ளிகளும் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றி சமானிய பிள்ளைகளுக்கு சமச்சீர் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதே மாதிரி 7.5. % நீட் பாஸ் செய்தவர்களுக்கு மருத்துவ கல்வி இடம் கிடைக்க வழி வகை செய்யப்பட்டிருக்கிறது.
 
எல்லாவற்றிற்கு மேலாக விமானம் இயங்க ஆரம்பித்தது. சாலைகள் போடப்பட்டிருக்கிறது. சிப்மர் தமிழக மக்களுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ரேஷன் பொருள்களை பற்றி விஜய் சொன்னார். ரேஷன் பொருள்கள் புதுச்சேரியில்  முன்னேறிக் கொண்டிருப்பதாக விஜய் பேசிய கருத்து விளக்கம் கொடுத்திருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.