ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 ஜூலை 2022 (10:35 IST)

நான்தான் ஜெயலிலிதா அண்ணன்.. பங்குக்கு வந்த புதிய நபர்!

Jayalalitha
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளில் தனக்கும் பங்கு வேண்டும் என புதிதாக ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் தமிழ்நாடு முதல்வரான ஜெயலலிதா கடந்த சில ஆண்டுகள் முன்னதாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது போயஸ் கார்டன் இல்லத்தை அதிமுக “அரசு இல்லமாக” அறிவித்த நிலையில், அதை எதிர்த்து ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த 2020ம் ஆண்டில் தீபக், தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் வாரிசு என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போயஸ் கார்டன் வீடு அவர்களிடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மைசூரை சேர்ந்த 83 வயது முதியவர் ஒருவர் தான் ஜெயலலிதாவின் அண்ணன் என கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். என்.ஜெ.வாசுதேவன் என்ற அந்த நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள புகாரில் தான் ஜெயலலிதாவின் அண்ணன் என்றும், தீபக், தீபாவை வாரிசுகளாக அறிவித்ததை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.