புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்காலத்தில் என்ஆர் காங்கிரஸ் கட்சியை தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணிக்கு கொண்டுவர விஜய் முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஒப்புதலுடன் புதுச்சேரி ரேஷன் கடைகளில் இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது என்றும், அதுகூட தெரியாமல் விஜய் பேசியுள்ளார் என்றும் நமச்சிவாயம் கூறினார். புதுச்சேரியில் ரேஷன் கடைகளே இல்லை என தவெக தலைவர் விஜய் கூறியதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
விஜய் மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தாலும், கண்டிப்பாக 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்றும் நமச்சிவாயம் உறுதியாக கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொண்டு வர முயற்சி செய்யப்பட்டிருப்பதாகவும், அதையேதான் விஜய்யின் வாக்குறுதியாக தருகிறார் என்றும் அவர் கூறினார்.
Edited by Siva