1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thivagar political party will collide with ADMK

சசிக்கலாவின் அதிமுகவுடன் இணைகிறது திவாகரன் கட்சி!? – குழப்பத்தில் அதிமுகவினர்!

Anna Dravidar Kazhakam
திவாகரன் தனது கட்சியான அண்ணா திராவிடர் கழகத்தை சசிக்கலா தலைமையில் அதிமுகவில் இணைக்க உள்ள நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை யாருக்கு என்பதில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், மற்றொருபுறம் அதிமுக பொதுசெயலாளர் என சசிக்கலா தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டு வருவது மேலும் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் நாளை மறுநாள் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் அதிமுகவுடன் பொது செயலாளர் சசிக்கலா முன்னிலையில் இணைய உள்ளதாக சசிக்கலாவே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற உள்ளது.

அதிமுகவின் பெயரில் திவாகரனின் கட்சி இணைவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது அதிமுகவினருக்கே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
வயலில் தெரிந்த திருவள்ளுவர் உருவம்.. வைரலாகும் தமிழ் விவசாயியின் திறமை!