1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Velumani says about dmk govt

திமுக ஆட்சியை திமுகவினரே விரும்பவில்லை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து

திமுக
திமுக ஆட்சியை எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் மட்டும் இன்றி திமுகவினரே விரும்பவில்லை என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது ’திமுக ஆட்சியை திமுக கட்சியினரே விரும்பவில்லை என்றும் கோவையில் கஞ்சா பழக்கம் அதிகரித்துவிட்டது என்றும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது என்றும் தெரிவித்தார். 
 
கோவையில் மட்டும் 1250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறிய எஸ்பி வேலுமணி தொண்டாமுத்தூரில் பேருந்து முனையம் அமைக்க அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கினோம் என்றும் ஆனால் திமுக அரசு அந்த நிதியை வீணாக்கி வருகிறது என்றும் தெரிவித்தார். 
 
தொண்டாமுத்தூர் பேருந்து நிலையம் பணிகள் முறையாக நடக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மீண்டும் 9000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 26 பேர் பலி..!