வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2023 (21:48 IST)

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி கூறிய அரசியல் கட்சித் தலைவர்கள்

stalin
தொழிலாளர் நலத்துறையின் சட்டமுன்வடிவு மீதான மேல்நடவடிக்கைகளை நிறுத்திவைத்ததற்காக தமிழகத்திலுள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் முதல்வருக்கு நேரில் சென்று  நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் முதல்வர் முக.,ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில்  அண்மையில் 12 மணி நேர வேலை மசோதா உள்பட 17 மசோதாக்கள், சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பும் முன்பு சட்ட மசோதாக்களைத் திரும்பப்பெறத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில் இந்த மசோதாக்கள் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இம்மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே  தற்போது 12 மணி நேரவேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பாக  முதல்வர் முக.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் , ‘’ பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் முனைப்போடு செயல்படும் இந்த அரசு ஒரு சட்ட முன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகிறதோ,. அது குறித்து மக்களிடம் இருந்து மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்பட்டால் அவற்றை சீர்தூக்கி பார்திது, அவற்றிக்கு  மதிப்பளிக்கும் வகையில், நடந்துகொள்ளும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும் ‘’என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ‘’தொழிலாளர் நலத்துறையின் சட்டமுன்வடிவு மீதான மேல்நடவடிக்கைகளை நிறுத்திவைத்ததற்காக திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி. வீரமணி, துணைத் தலைவர் திரு. கலி.பூங்குன்றன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற உறுப்பினர் திரு. கு.செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தி.வேல்முருகன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் திரு. கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. சு.வெங்கடேசன், திரு.எம்.செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. டி.ரவிக்குமார், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் திரு. இரா.அந்திரிதாஸ் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் முக,.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டதாக முதல்வர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.