1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:35 IST)

நீட் விலக்கு மசோதா: திருப்பி அனுப்பிய ஆளுநர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆனார் என்று திருப்பி அனுப்பி உள்ளார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் ஆய்வு செய்தார்
 
மறுபரிசீலனை செய்ய மசோதாவை உரிய விளக்கங்களுடன் சபாநாயகருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார்
 
ஏழை மாணவர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்பு சந்திப்பதை நீட் தேர்வு தடுக்கின்றது.
 
நீட் தேர்வு தொடர்பான வழக்கில் விரிவாக விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் நீட்தேர்வு சமூகநீதியை காப்பதாக தெரிவித்துள்ளது
 
 இவ்வாறு ஆளுநர் திருப்பி அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது