தொடர்புடைய செய்திகள்
- கோவில்களை திறக்கப் போராட்டம்! – பாஜக அண்ணாமலை மீது வழக்கு!
- போராட்டத்திற்கு காளிகாம்பாள் கோயிலை அண்ணாமலை தேர்வு செய்தது ஏன்?
- கழிவறையை சுத்தம் செய்த பாஜக தலைவர்
- ஆஸ்கர் வாங்குனாப்ல இருக்கு.. ஆட்டுக்குட்டி பரிசு! – அண்ணாமலை மகிழ்ச்சி!
- வேளாண் சட்டங்களை நிறுத்தி வெச்சிருக்கோமே? ஏன் போராடுறீங்க? – உச்ச நீதிமன்றம் கேள்வி!
அண்ணாமலையுடன் நேரில் விவாதிக்கத் தயார்: வேல்முருகன்
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நேரில் விவாதிக்கத் தயார் எனவும், புதிய வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்பதை நிரூபிக்க தயார் என்றும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதிய வேளாண்மை சட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயார் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேல்முருகனின் இந்த சவாலை ஏற்று அண்ணாமலை விவாதம் செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அடுத்த கட்டுரையில்
