ஆஸ்கர் வாங்குனாப்ல இருக்கு.. ஆட்டுக்குட்டி பரிசு! – அண்ணாமலை மகிழ்ச்சி!

Annamalai
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:56 IST)
சென்னிமலையில் பாஜக நிர்வாகிகள் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசளித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முன்னதாக காவல் அதிகாரியாக பணியாற்றிய கரூரை சேர்ந்த அண்ணாமலை தனது பதவியிலிருந்து விலகி தன்னிடம் உள்ள சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். பின்னர் பாஜகவில் இணைந்த அவர் தற்போது பாஜக தமிழக தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சென்னிமலை சென்ற அவருக்கு தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசளித்தனர். அந்த பரிசை பெற்றுக் கொண்ட அண்ணாமலை “இந்த ஆட்டுக்குட்டி பரிசு எனக்கு ஆஸ்கர் விருதை பெற்றது போலான மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :