1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 அக்டோபர் 2021 (13:50 IST)

வேளாண் சட்டங்களை நிறுத்தி வெச்சிருக்கோமே? ஏன் போராடுறீங்க? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை உள்ள நிலையில் போராடுவது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக விவசாயிகள் பலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சர் வருகையின்போது விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தால் 9 பேர் பலியான சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளதால் முன்னதாகவே வேளாண் சட்டங்களை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள்? என்றும், எதற்காக யாரை எதிர்த்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராடுகிறார்கள் என்பதே எங்களுக்கு புரியவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.