வேலூரிலும் சர்கார் பாணியில் ஒரு டெண்டர் வாக்கு!

Last Updated: புதன், 7 ஏப்ரல் 2021 (09:07 IST)

வேலூரில் வங்கி ஊழியர் ஒருவர் தனது வாக்கை கள்ள ஓட்டு மூலம் யாரோ செலுத்திவிட 49 P மூலமாக டெண்டர் வாக்களித்தார்.

வேலூரைச் சேர்ந்த வங்கி ஊழியரான லோகேஷ் நிவாஸன் வாக்களிக்க சென்ற போது அவரது வாக்கை வேறு யாரோ செலுத்திவிட தனக்கு வாக்களிக்க அனுமதி வழங்கவேண்டும் என அவர் கேட்டுள்ளார். இதையடுத்து வாக்குச்சாவடி அதிகாரிகள் அவருக்கு டெண்டர் ஓட்டை அளிக்க முடிவு செய்தனர்.

அதன் படி அவரின் வாக்கு பதிவு செய்யப்பட்டு கவரில் சீல் வைக்கப்பட்டது. இந்த வாக்கு வாக்கு எந்திரத்தோடு பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின் போது முதல் இரண்டு வேட்பாளர்களின் வாக்கும் சமமாக இருந்தால் அவரின் பிரித்து பார்க்கப்படும். இல்லையென்றால் அந்த வாக்கு கணக்கில் கொள்ளப்படாது.இதில் மேலும் படிக்கவும் :