1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2018 (14:53 IST)

வேலூரில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர்கள்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர்களே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இன்றைய மாணவர்கள் பலர் பொறுப்பற்றவர்களாய் இருக்கின்றனர். இளம் வயதிலேயே போதை பழக்கத்திற்கு அடிமையாகி படிப்பையையும் வாழ்க்கையையும் துலைத்து விட்டு நிற்கின்றனர். சமீபத்தில் சென்னையில் ரயில் நிலையத்தில் மாணவர்கள் செய்த அட்டுழியத்தை சொல்லி மாலாது. 
 
இந்நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு பள்ளியில், பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் சிலர், பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் பாபு, மாணவர்களை கண்டித்துள்ளார். தலைமை ஆசிரியர் திட்டியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பாபுவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.
 
ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த பாபுவை, பள்ளி ஊழியர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் தப்பியோடிய மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர்களே கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.