திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2018 (18:09 IST)

எடப்பாடிக்கு காது கேளாதோர் கருவி: மாணவர்கள் அதிரடி போராட்டம்!

பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியதை அடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்களும் மாணவர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் தமிழக அரசு அதற்கு செவிகொடுக்காமல் உள்ளது.
 
மாணவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிகொடுக்காமல் இருப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காதுகேளாதோர் கருவி அனுப்பும் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
 
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியதும் பெரிதும் பாதிக்கப்பட்டது ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். மேலும் இதில் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் இந்த போராட்டங்கள் போலீஸ் தடியடியால் கலைக்கப்பட்டது.
 
இந்நிலையில் இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், செவிசாய்க்காத அரசுக்கு காது கேளாதோர் கருவி அனுப்பும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தபால் மூலம் அந்த கருவியை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து போராட்ட களத்துக்கு வந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.