1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 மே 2021 (19:51 IST)

காய்கறி,மளிகை, கறிக்கடை நேரம் குறைப்பு ! தமிழக அரசு அதிரடி

இன்றுடன்  காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை செயல்பட்டுவந்த நேரம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
 

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.


தற்போது, தமிழகத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருவதால்  ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஒருநாளில் 30 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தொற்றில் இருந்து மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என தமிழக அரசும் காவல்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், காற்கறி, மளிகைக்கடை, இறைச்சிக்கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இன்றுவரை காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை செயல்பட்டுவந்த நேரம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்கறி நடைபாதை, பூக் கடைகள்,பழம் விற்பனை கடைகளுக்கு அனுமதி இல்லை; ஏடிஎம், பெட்ரோல் பங்க்,நாட்டு மருந்துக்கடை, மெடிக்கல் இயங்கலாம், டீக் கடைகள் இயங்க அனுமதியில்லை,. அதேபோல் வரும் மே 17 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.