1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 28 மார்ச் 2025 (12:30 IST)

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

udhayanidhi
நமக்கு ரூல்ஸ் போட்டவர்களை ஒரே ஒரு ரூ போட்டு ஓட வைத்தவர் நமது முதல்வர் ஸ்டாலின் என துணை முதலமைச்சர் உதயநிதி இன்று சட்டப்பேரவையில் பேசினார்.
 
பாசிஸ்டுகள் எத்தனை ரூல்ஸ் போட்டு தமிழ்நாட்டை அடக்க நினைத்தாலும், பட்ஜெட்டில் ஒரே ஒரு ரூ போட்டு அவர்களை அலற வைத்துவிட்டார் நமது முதல்வர் என்று தெரிவித்தார்.
 
மேலும், சென்னையில் கார்பந்தயம் நடத்துவதற்கு எத்தனையோ எதிர்ப்புகள் வந்தன. ஆனால், எதிர்த்தவர்களை பாராட்டும் அளவுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது என்று கூறிய துணை முதல்வர், "வெற்றிக்கு முன்பே தகுதி உள்ள வீரர்களை கொண்டாடினோம்" என்றும் தெரிவித்தார்.
 
எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்டபோது, அதற்கு நான் பதில் சொல்லும் போதெல்லாம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அவையில் இருப்பதில்லை என்றும், தொடர்ந்து இதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்தார். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நான் பேசும் போதெல்லாம் அவையில் இருப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran