1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (13:56 IST)

தனியார் ஆம்புலன்ஸுகளுக்கு கட்டணம் நிர்ணயம்! – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளில் விருப்பத்திற்கு விலை நிர்ணயம் செய்வதாக வெளியான புகாரையடுத்து தமிழக அரசு நிர்ணயிக்கப்பட்ட விலை குறிப்பை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆம்புலன்ஸ் சேவைகளின் தேவையும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளில் அதிகமான பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கனா நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ஆம்புலன்ஸில் உள்ள வசதிகளை பொறுத்து ரூ.1000 முதல் ரூ.4000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண ஆம்புலன்ஸ் சேவைக்கு 10 கி.மீ தூரத்திற்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 கி.மீட்டருக்கு மேல் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் வசதி உள்ள ஆம்புலன்ஸ்களில் 10 கி.மீட்டருக்கு மேல் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.50 ரூபாயும், வெண்டிலேட்டர் உள்ள ஆம்புலன்ஸ்களில் 10 கி.மீட்டருக்கு மேல் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.100ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.