வெள்ளி, 28 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 மார்ச் 2025 (12:08 IST)

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

TVK Meet

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடந்த நிலையில் அதில் கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழுவில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை எதிர்ப்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

தமிழக வெற்றிக் கழகம் நிறைவேற்றிய 17 தீர்மானங்கள்:

 
  • இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வக்பு சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்
  •  
  • மீனவர்கள் போராட்டத்தில் அவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
  •  
  • பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது
  •  
  • தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் தொடர வேண்டும் என்பதில் தவெக உறுதி
  •  
  • நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு தேவையில்லை
  •  
  • மாநில அரசுகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
  •  
  • பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றங்கள் தேவை
  •  
  • அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்றக் கூடாது என தீர்மானம்
  •  
  • தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவிற்காக திமுக அரசிற்கு கண்டனம்
  •  
  • டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்
  •  
  • சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்
  •  
  • இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு என தீர்மானம்
  •  
  • கிழக்கு கடற்கரை சாலை பன்னாட்டு அரங்கிற்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட கோரிக்கை
  •  
  • தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து முடிவுகளையும் கட்சித் தலைவரே எடுக்க தீர்மானம்
  •  
  • தவெகவிற்காக பாடுப்பட்டு மறைந்த செயல்வீரர்களுக்கு இரங்கல்
  •  
  • புதிய தவெக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்
  •  
  • தவெகவினர் கட்சியின் கொள்கை தலைவர்கள் வழியில் பயணிக்க உறுதிமொழி
     
 

Edit by Prasanth.K