திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 13 மே 2021 (20:14 IST)

கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்கள் - தமிழக அரசு உத்தரவு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.  
 
இந்நிலையில் கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது.  இதனால் 2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் தர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று இத்திட்டம் அமலுக்கு வருகிறது.