1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vck thirumavalavan interview before meeting cm stalin

தேசிய அளவில் மதுவிலக்கு.. முதல்வரை சந்திக்கும் முன் திருமாவளவன் பேட்டி..!

Thiruma
தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி முதல்வரை சந்திக்க உள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
 
தேசிய மதுவிலக்கு கொள்கையை  மத்திய அரசிடம் திமுகவும் வலியுறுத்த வேண்டும் என்பதால் முதல்வரை சந்திக்க இருக்கிறேன் என கூறிய திருமாவளவன், அரசியலுக்காக மதுவிலக்கு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தவில்லை என்று கூறினார். 
 
மேலும் முதல்வரின் சந்திப்பின் போது, மதுவிலக்கு மாநாடு குறித்து ஆலோசிப்போம், மாநாட்டிற்கு அழைப்பும் விடுப்போம் என்றும், அதிமுக போன்ற கட்சிகளுக்கு நேரில் அழைப்பு விடுப்பது குறித்து இரண்டு ஒரு நாட்களில் ஆலோசித்து முடிவு செய்வோம் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் மதுவிலக்கு மாநாட்டை விசிக கையில் எடுப்பதால் கூட்டணியில் விரிசல் வந்தாலும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
நாளை தொடங்குகிறது புரட்டாசி மாதம்: இன்றே திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்..!