ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2024 (07:02 IST)

முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் திருமாவளவன்.. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பாரா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த சந்திப்பின் போது அவர் ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கேட்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோவில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று அவர் முழக்கமிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில நிமிடங்களில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது.

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற வீடியோ பதிவு செய்து உடனடியாக நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதே வீடியோவை மீண்டும் திருமாவளவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை இன்று திருமாவளவன் சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக உள்பட அனைத்து கட்சிகளுக்கும் திருமாவளவன் அழைப்பு கொடுத்திருந்த நிலையில் இன்று திமுகவை அழைக்க முதல்வரை நேரில் சந்திக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Edited by Siva