வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2024 (06:56 IST)

ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூகம் மன்னன் பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி ஆரம்பித்து பீகார் மாநில தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் தான் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்றும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக பிரசாந்த் கிஷோர் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை ரத்து செய்வேன் என்று கூறியுள்ளார்.

வரும் அக்டோபர் இரண்டாம் தேதி ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்க உள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சி தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் எங்கள் அரசு அமைந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன் என்றும் பெண்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சம் எங்கள் கட்சிக்கு இல்லை என்றும் நான் நடைமுறைக்கு பலனளிக்கும் அரசியலை நம்புபவன் என்றும் தெரிவித்தார்.

தற்போது உள்ள ஆட்சியாளர்கள் பீகார் மாநிலத்திற்கு சேதத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் என்றும் அவர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கூறினார். பிரசாந்த் கிஷோர் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன் என்று கூறி இருப்பது ஆண்கள் ஓட்டுக்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva