1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vck president thirumavalavan hospitalized

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி.. என்ன காரணம்?

விசிக
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக நேற்று இரவு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் தற்போது உடல்நலம் தேறி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சாலையில் சிதறிக்கிடந்த வைர கற்கள்? கூட்டம் கூட்டமாய் அள்ளிய மக்கள்! – குஜராத்தில் விநோத சம்பவம்!