தொடர்புடைய செய்திகள்
- 5 வயது முதல் 35 வயதினருக்கான மாநில அளவிலான மாபெரும் சிலம்பப் போட்டி!
- துர்க்கையம்மன் கோவில் திருவிழாவை மரபு வழிபடி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி!
- வீரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா-15 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடிகள் எடுத்தும் நேர்த்தி கடன்!
- டிடிஎப் வாசன் மீண்டும் கைது.. மதுரை போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..!
- பேருந்து நிழற்கூடையில் குப்பையோடு குப்பையாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர்
சீரடி சாய்பாபா கோவிலில் 15 வது வருடாபிஷேக விழா!
மதுரை மாவட்டம், திருவேடகம் அருகே, வைகை நதிக்கரையோரம் அமைந்துள்ள சீரடி சாயிபாபா கோவிலில்,15 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது.
வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 3ஆம் தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை விக்னேஸ்வர பூஜையுடன் யாகவேள்வி தொடங்கி நடைபெற்றது.
தொடர்ந்து, பூர்ணாகதி சதுர்வேத பாராயணம், நடைபெற்று மகா தீபாரதனையுடன் முதல் கால யாக பூஜை நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து, 4ம் தேதி காலை 10 மணிக்கு மேல் இரண்டாவது கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 12 மணி அளவில் கடம் புறப்பாடாகி 15 ஆம் ஆண்டு வருடா பிஷேக விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, சாய்பாபாவுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. தீபாராதனை காட்டப்பட்டது .
இதனை தொடர்ந்து கோவில் மண்டபத்தில், பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
