1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , திங்கள், 3 ஜூன் 2024 (11:20 IST)

5 வயது முதல் 35 வயதினருக்கான மாநில அளவிலான மாபெரும் சிலம்பப் போட்டி!

மதுரை மாடக்குளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சோமு, தர்மலிங்கம் போன்ற முன்னணி சண்டை பயிற்சியாளர்கள் பூர்வீகமாக கொண்டு ஏழு தலைமுறைகளுக்கு மேலாக அனைவருக்கும் இலவசமாக சண்டை பயிற்சி அளித்து வரும் மதுரை மாடக்குளம் கலிங்க வஸ்தாத்  ஏழு தலைமுறை பாரம்பரிய சிலம்பம் அறக்கட்டளை மற்றும் விராட்டிபத்து ஐந்து தலைமுறை பாரம்பரிய  மாருதி சிலம்பம் பள்ளி சார்பாக ஐந்து வயது முதல் 15 வயதினருக்கான மாநில அளவிலான சிலம்பம் போட்டி  மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்றது. 
 
இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.  
 
இந்த போட்டிகள் 6 களமாக நடைபெற்றது சுற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள்,பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.