தொடர்புடைய செய்திகள்
- ரத்து செய்யப்பட்ட நட்சத்திர விடுதிகளின் உரிமம்.. 48 மணி நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்ட மர்மம்?
- இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் சரிந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!
- டிஜிபி பெயரில் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
- சர்வதேச ட்ராபிக் சிக்னல் தினம்.! சென்னையில் ஹார்ட்டின் வடிவில் ஒளிரும் சிக்னல் விளக்குகள்.!!
- சென்னையில் 'Zero is Good' பதாகை எதற்காக.? குழப்பத்தில் வாகன ஓட்டிகள்.! நூதன விழிப்புணர்வு..!!
சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயிலில் திடீரென கேட்ட சத்தம்.. பயணிகள் அலறல்..!
சென்னை மைசூர் வந்தே பாரத் ரயிலில் திடீரென சத்தம் கேட்டதால் பயணிகள் அலறி அடித்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மைசூர் வந்தே பாரத் ரயில் இன்று ஆம்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது பயணி ஒருவரின் செல்போன் திடீரென வெடித்ததாக தெரிகிறது. சி11 என்ற பெட்டியில் பயணம் செய்த பயணியின் செல்போன் சார்ஜில் போடப்பட்டிருந்த நிலையில் அந்த செல்போன் திடீரென வெடித்தது.
மேலும் செல்போன் வெடித்து புகை வந்ததால் பயணிகள் அலறி அடித்து ரயிலை நிறுத்த முயற்சி செய்தனர். இதனை அடுத்து வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் பெட்டிகளின் கதவு திறக்கப்பட்டு முழுவதும் புகை வெளியேற்றப்பட்டது பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற பின்னர் 35 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றதாக தெரிகிறது.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. செல்போன் வெடித்த சம்பவம் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
