புதன், 2 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (12:18 IST)

சென்னையில் 'Zero is Good' பதாகை எதற்காக.? குழப்பத்தில் வாகன ஓட்டிகள்.! நூதன விழிப்புணர்வு..!!

Zero Is Good
சென்னையில் விபத்துகளை குறைக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த Zero Is Good எனும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.   
 
கடந்த  இரண்டு நாட்களாக சென்னை முழுவதும் பல்வேறு சாலைகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூதன முறையில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையில் ஜீரோ இஸ் குட் ( Zero is Good ) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த நூதன அறிவிப்பு பலகைகளை, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வைத்துள்ளனர்.  
 
மஞ்சள் நிற கலரில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த அறிவிப்பு பலகை பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதே போன்று ஒரு சில ஆட்டோக்கள் பின்புறத்திலும் இதே வாசகம் பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்து நிறுத்தத்திலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் இடையே கவனத்தைப் பெற்று வருகிறது.

பலரும் இந்த வாசகம் எதற்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் என்ன விழிப்புணர்வை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தப்பட உள்ளனர் என குழும்பி இருக்கின்றனர்.   Zero is Good என்பது சாலைகளில் விதிமுறைகளை முறையாக பின்பற்றி சென்னையில் விபத்துகளை முற்றிலும் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பூஜ்ஜிய விபத்துகள் நல்லது என இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

 
விபத்துகளை குறைக்க, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்பொழுது நூதன முறையில் சென்னை போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.