தொடர்புடைய செய்திகள்
- டிஜிபி பெயரில் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
- இதுதான் ஒலிம்பிக் நடத்துற லட்சணமா? தங்கம் வென்ற வீரர் நடுரோட்டில்..!? - வைரலாகும் புகைப்படம்!
- சர்வதேச ட்ராபிக் சிக்னல் தினம்.! சென்னையில் ஹார்ட்டின் வடிவில் ஒளிரும் சிக்னல் விளக்குகள்.!!
- சென்னையில் 'Zero is Good' பதாகை எதற்காக.? குழப்பத்தில் வாகன ஓட்டிகள்.! நூதன விழிப்புணர்வு..!!
- மீண்டும் தங்கம் விலை உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?
இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் சரிந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு சவரனுக்கு 500 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று தங்கம் ஒரு கிராம் 70 ரூபாயும் ஒரு சவரன் 560 ரூபாயும் குறைந்திருக்கும் நிலையில் இன்றைய விலை நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ரூபாய் 6,400 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 560 குறைந்து ரூபாய் 51,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.51,000ஐ என குறையும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,855 எனவும் ஒரு சவரன் ரூபாய் 54,840 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 87.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 87,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
