வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (13:41 IST)

டிஜிபி பெயரில் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

bomb threat

சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றிற்கு டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் ஆன இமெயில் ஐடியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 சமீபமாக சென்னையில் உள்ள பல பள்ளிகளுக்கு  மர்ம நபர்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதை ஆகி வருகிறது.  எனினும் இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்களில் போலீசார் அலட்சியம் காட்டாமல் உடனடியாக பள்ளிகளில் சோதனை நடத்தியும்,  இமெயில் ஐடியை டிராக் செய்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  ஆனால் இது போன்ற மிரட்டல் சம்பவங்களால் பள்ளிகளுக்கு அடிக்கடி விடுமுறை விட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது.
 

 

இந்நிலையில் தற்போது சென்னை ஆர் ஏ புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுவும் டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் ஆன போலி இமெயில் ஐடி மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.  இந்த செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது 9-வது முறையாகும்.

 

 தொடர் இமெயில் மிரட்டல் சம்பவங்கள் குறித்து சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அடிக்கடி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K