1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vandalur crocodile walk in public area

வண்டலூர் அருகே வாக்கிங் சென்ற முதலை! – அதிர்ச்சியில் மக்கள்!

Vandalur
வண்டலூர் அருகே பூங்காவிலிருந்து தப்பித்த முதலை ஒன்று மக்கள் வாழும் பகுதியில் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி, முதலை உள்ளிட்ட பல வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு, பராமரித்து வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வண்டலூர் அருகே உள்ள கோளப்பாக்கம் பகுதியில் காலையில் முதலை ஒன்று சாவகாசமாக சென்றுள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வண்டலூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் விரைந்து வந்து முதலையை பிடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ரஷ்யா தாக்குதலால் 97 குழந்தைகள் உயிரிழப்பு! – உக்ரைன் அதிர்ச்சி தகவல்!