ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (14:41 IST)

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட அதிக வெப்பம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பகல் நேரங்களில் அதிக வெப்பம் இருக்கும் என்றும் இயல்பை விட இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இருப்பினும் மார்ச் 16 முதல் 18 வரை 3 நாட்களுக்கு தேனி தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆனால் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது