1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 16 மார்ச் 2022 (08:19 IST)

ரஷ்யாவில் நடைபெறவிருந்த செஸ் போட்டி சென்னையில்: முதல்வர் வரவேற்பு

ரஷ்யாவில் நடைபெற இருந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதால் ரஷ்யாவில் நடைபெற இருந்த பல விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்த 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் உலக செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகளை வரவேற்பதாக இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
52 நாடுகளை சேர்ந்த சுமார் இரண்டாயிரம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது